/உள்ளூர் செய்திகள்/மதுரை/தொழிற்சாலைகளின் உரிமம் புதுப்பிக்க அக். 31 கடைசிதொழிற்சாலைகளின் உரிமம் புதுப்பிக்க அக். 31 கடைசி
தொழிற்சாலைகளின் உரிமம் புதுப்பிக்க அக். 31 கடைசி
தொழிற்சாலைகளின் உரிமம் புதுப்பிக்க அக். 31 கடைசி
தொழிற்சாலைகளின் உரிமம் புதுப்பிக்க அக். 31 கடைசி
ADDED : அக் 05, 2011 12:50 AM
மதுரை : வருகிற 2012ல் தொழிற்சாலைகளின் உரிமத்தை அக்., 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
உரிம கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர், மதுரை, என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாக எடுக்க வேண்டும். படிவம் 2 விண்ணப்பத்தை மூன்று நகல்களில் பூர்த்தி செய்து அசல் உரிமத்துடன் அக்., 31க்குள் அனுப்ப வேண்டும். உரிய தேதிக்குள் விண்ணப்பம் பெறப்படாமல், நவம்பரில் பெறப்பட்டால் உரிமக் கட்டணத்தில் 10 சதவீதம் கூடுதல் கட்டணமாகவும், டிசம்பரில் பெறப்பட்டால் 20 சதவீதமாகவும், அதன் பின் பெறப்பட்டால் 30 சதவீதமாகவும் செலுத்த வேண்டும். எனவே தாமதத்தை தவிர்க்குமாறு, தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் அப்பாவுசாம்ராஜ் தெரிவித்துள்ளார்.


