/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஓட்டுகள் எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வுஓட்டுகள் எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு
ஓட்டுகள் எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு
ஓட்டுகள் எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு
ஓட்டுகள் எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 12, 2011 02:26 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலத்தில் ஓட்டு எண்ணும் மையங்களை கலெக்டர் மணிமேகலை நேற்று ஆய்வு செய்தார்.உள்ளாட்சி மன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் பதிவாகும் ஓட்டுக்கள் மார்க்கெட் கமிட்டியிலும், கள்ளக்குறிச்சி நகராட்சி, சங்கராபுரம் பேரூராட்சியில் பதிவாகும் ஓட்டுக்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணும் பணி நடக்கிறது.
ஓட்டு எண்ணும் மையங்களை நேற்று மாலை 5.15 மணிக்கு கலெக்டர் மணிமேகலை நேரில் ஆய்வு செய்தார்.பதிவான ஓட்டு பெட்டிகள் வைக்கப்படும் அறைகள், எண்ணும் அறைகளை பார்வையிட்டு, தேவையான முன்னேற்பாடுகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களை கேட்டுக் கொண்டார். ஆய்வின் போது ஆர்.டி.ஓ., உமாபதி, தாசில்தார்கள் வைகுண்டவரதன், கோகுலபத்மநாபன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாலமுருகன், இளங்கோ, பி.டி.ஓ., கருணாகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உடனிருந்தனர்.இதேபோல் சின்னசேலம் ஒன்றியத்தில் பதிவாகும் ஓட்டுக்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சின்னசேலம், வடக்கனந்தல் பேரூராட்சியில் பதிவாகும் ஓட்டுக்கள் மார்க்கெட் கமிட்டியிலும் எண்ணப்படுகிறது. ஓட்டு எண்ணும் மையங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயபாலன், பி.டி.ஓ., ஆதம், வி.ஏ. ஓ.,க்கள் ராணி, ராஜேந்திரன் உடனிருந்தனர்.


