Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/95,635 பேரில் 54,457 பேர் "பெயில்!'உடனடி தேர்வில் மாணவர்கள் பரிதாபம்

95,635 பேரில் 54,457 பேர் "பெயில்!'உடனடி தேர்வில் மாணவர்கள் பரிதாபம்

95,635 பேரில் 54,457 பேர் "பெயில்!'உடனடி தேர்வில் மாணவர்கள் பரிதாபம்

95,635 பேரில் 54,457 பேர் "பெயில்!'உடனடி தேர்வில் மாணவர்கள் பரிதாபம்

ADDED : ஜூலை 27, 2011 01:27 AM


Google News
சென்னை : பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவில், 43.05 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில், மீண்டும் 54 ஆயிரத்து 457 பேர் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்களுக்கு, சமீபத்தில் உடனடித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாயின. 95 ஆயிரத்து 635 மாணவர்கள் தேர்வெழுதியதில், 41 ஆயிரத்து 178 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 54 ஆயிரத்து 457 மாணவர்கள் மீண்டும் தோல்வியடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 43.05. இந்த மாணவர்கள், அடுத்ததாக அக்டோபரில் நடக்கும் தனித் தேர்வில் பங்கேற்கலாம். ஆனால், நடப்புக் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர முடியாது. பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள், தனித் தேர்வுக்காக காத்திருந்து ஒரு கல்வியாண்டை வீணடிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் உடனடித் தேர்வுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும், 50 சதவீதம் அளவிற்கே தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

தேர்ச்சி விவரம்:

பாட எண்ணிக்கை எழுதியோர் தேர்ச்சி பெற்றோர் சதவீதம்

ஒரு பாடம் 57,943 25,967 44.81இரு பாடங்கள் 26,425 5,323 20.14மூன்று பாடங்கள் 11,267 9,888 87.76

மொத்தம் 95,635 41,178 43.05

நமது சிறப்பு நிருபர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us