/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டி அருகே வாலிபர் இறந்த வழக்கு போலீஸ் விசாரணை கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே வாலிபர் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நகோவில்பட்டி அருகே வாலிபர் இறந்த வழக்கு போலீஸ் விசாரணை கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே வாலிபர் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை ந
கோவில்பட்டி அருகே வாலிபர் இறந்த வழக்கு போலீஸ் விசாரணை கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே வாலிபர் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை ந
கோவில்பட்டி அருகே வாலிபர் இறந்த வழக்கு போலீஸ் விசாரணை கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே வாலிபர் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை ந
கோவில்பட்டி அருகே வாலிபர் இறந்த வழக்கு போலீஸ் விசாரணை கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே வாலிபர் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை ந
ADDED : ஆக 08, 2011 04:06 AM
கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே வாலிபர் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி அருகேயுள்ள ஆவல்நத்தம் பகுதியை சுந்தரலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ராஜகிருஷ்ணம்மாள்(60).
இவர்களது மகன் மயில் என்ற முத்துமாரியப்பன் (22). இவர் கட்டட வேலை, காட்டுவேலை உட்பட கிடைக்கின்ற கூலி வேலைக்கு சென்று வந்தார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி அதிகமாக மதுகுடித்து வீட்டில் படுத்திருந்ததாகவும், மாலையில் வீட்டை விட்டு சென்றதாகவும் தெரிகிறது. அதற்கு பின்னர் முத்துமாரியப்பன் வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் சுந்தரலிங்கபுரம் ஊருக்கருகேயுள்ள பாழடைந்த கிணற்றில் பிணம் மிதப்பதாகவும், முத்துமாரியப்பன் போல் உள்ளதாகவும் அவரது பெற்றோர்களுக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராஜகிருஷ்ணம்மாள் கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சம்பவம் நடந்த கிணற்றில் வந்து பார்த்தபோது மிதந்து கொண்டிருந்த உடல் முத்துமாரியப்பன் தான் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் இறந்து இரண்டு நாட்களைக் கடந்து விட்டதால் அழுகிய நிலையில் இருந்த பிணத்தை கிணற்றருகிலேயே கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பரிசோதனை செய்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிநாராயணன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார். இதில் முத்துமாரியப்பன் பாதுகாப்பற்ற பாழுங்கிணற்றில் கால் கழுவச் சென்று தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படுவதால் அதுகுறித்தும் அல்லது வேறு காரணங்கள் ஏதும் உண்டா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


