/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சி நகராட்சி கூட்டம்: அ.தி.மு.க., வெளிநடப்புகாஞ்சி நகராட்சி கூட்டம்: அ.தி.மு.க., வெளிநடப்பு
காஞ்சி நகராட்சி கூட்டம்: அ.தி.மு.க., வெளிநடப்பு
காஞ்சி நகராட்சி கூட்டம்: அ.தி.மு.க., வெளிநடப்பு
காஞ்சி நகராட்சி கூட்டம்: அ.தி.மு.க., வெளிநடப்பு
ADDED : ஆக 30, 2011 09:38 PM
காஞ்சிபுரம் : நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
காஞ்சிபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் கடந்த 29ம் தேதி நடந்தது. நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டம் துவங்கியதும், அ.தி.மு.க., குழுத் தலைவர் மனோகரன் எழுந்து, நகராட்சியில் அடிப்படை பணிகள் நிறைவேற்றப்படாததால், வெளிநடப்பு செய்கிறோம் எனக் கூறி வெளியேறினார். அவருடன் மற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்களும் வெளியேறினர். இது குறித்து மனோகரன் கூறும்போது,'நகராட்சியில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. பொது கழிப்பறைகள் தண்ணீர் இல்லாமல், பராமரிப்பு இல்லாமல் உள்ளன. குப்பைகளும் அகற்றப்படுவதில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்' என்றார்.


