ADDED : செப் 28, 2011 12:59 AM
மதுரை : கட்டாய ஓய்வு திட்டத்தை கைவிட வலியுறுத்தி மதுரையில்
பி.எஸ்.என்.எல்., அலுவலர், ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்ட குழுவினர்
தர்ணாவில் ஈடுபட்டனர்.
அலுவலர், ஊழியர் சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன்,
பழனியப்பன், ஜெயபாண்டியன், கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பல்வேறு
தொழிற்சங்க நிர்வாகிகள் அழகர்சாமி, கருப்பையா, சூரப்பன் பேசினர். போனஸ்
வழங்க வேண்டும். மெடிக்கல் அலவன்ஸ், விடுமுறை மற்றும் எல்.டி.சி., பணம்
பெறுவது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


