Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குஜராத் போன்று பொள்ளாச்சியை உயர்த்துவோம்

குஜராத் போன்று பொள்ளாச்சியை உயர்த்துவோம்

குஜராத் போன்று பொள்ளாச்சியை உயர்த்துவோம்

குஜராத் போன்று பொள்ளாச்சியை உயர்த்துவோம்

ADDED : அக் 08, 2011 12:14 AM


Google News

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியை குஜராத் மாநிலம் போன்று முன்னேற்றுவோம், என, பா.ஜ., வேட்பாளர் தெரிவித்தார்.பொள்ளாச்சியில் பா.ஜ., - கொ.மு.க., நிர்வாகிகள் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடத்தினர்.

பா.ஜ., மாவட்ட தலைவர் பாபா ரமேஷ், கொ.மு.க., மாவட்ட தலைவர் நித்தியானந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.நகராட்சி தலைவருக்கு போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ஞானவடிவேல் விஜயராஜன் தேர்தல் அறிக்கை பற்றி கூறியதாவது:பொள்ளாச்சியில் பா.ஜ.,வை வெற்றி பெறச்செய்தால், பொள்ளாச்சி நகராட்சியை குஜராத் மாநிலம் போன்று முன்னேற்றுவோம். அதற்கு, நகராட்சி நிர்வாகத்தில் நடக்கும் ஊழலை முழுமையாக ஒழிப்போம்.பொள்ளாச்சியில் கோட்டூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி இரண்டு ஆண்டுக்கு மேலாக நடக்கிறது. மேம்பாலம் கட்டும் பணியை வேகப்படுத்தி நிறைவு செய்யவும், பொள்ளாச்சி அகல ரயில்பாதை அமைக்கும் பணியை வேகப்படுத்தி, பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு ரயில் விடவும் நடவடிக்கை எடுப்போம்.பொள்ளாச்சியில் குடிநீர் திட்டத்தை சீர்படுத்தி 36 வார்டுக்கும் ஒரே மாதிரியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்போம். அரசு கலைக்கல்லூரி, பைபாஸ் ரோடுகள், திட்ட ரோடுகள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கொண்டு வருவோம்.நகராட்சி பள்ளி இடத்தை அரசு மருத்துவமனை வசம் ஒப்படைத்து, அனைத்து நவீன மருத்துவவசதிகளுடன் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைய நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு, வேட்பாளர் ஞானவடிவேல் விஜயராஜன் தெரிவித்தார்.கூட்டத்தில் பா.ஜ., மாவட்ட செயலாளர்கள் திருவேங்கடகுமார், ரகுநாதன், கோவிந்தராஜ், பாபு, மற்றும் கொ.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us