/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகி கைதுசூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகி கைது
சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகி கைது
சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகி கைது
சூதாட்ட கிளப் நடத்திய தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : ஆக 20, 2011 11:47 PM
பல்லடம்:பல்லடத்தில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடத்திய
தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் உள்ளிட்ட 19 பேரை போலீசார் கைது
செய்தனர்.பல்லடம்- மங்கலம் ரோட்டில் மனமகிழ் மன்றம் நடத்தியவர்
தங்கவேல்(45); பல்லடம் ஒன்றிய தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர்.
மனமகிழ்மன்றத்தில் மதுஅருந்தியபடி சீட்டு விளையாடுவதாக பல்லடம்
போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார்,
மனமகிழ்மன்றத்தில் திடீர் சோதனை நடத்தினர்; அங்கு சூதாடிக்கொண்டிருந்த
மனமகிழ்மன்றத்தின் உரிமையாளர் தங்கவேல்(45) மற்றும் ராதாகிருஷ்ணன்(49)
சண்முகசுந்தரம்(29), பாலகிருஷ்ணன்(46), பாஸ்கர்(41), ஷேக்சிந்தா(39),
பாபு(43) ,குமரேஷ் (28) உள்ளிட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் 23 ஆயிரம் ரூபாயை போலீசார் கைப்பற்றினர்;
19 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சூதாட்டத்தில் பிடிபட்டவர்களில்
மற்ற சிலரும், தி.மு.க., சார்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது.


