ADDED : ஜூலை 24, 2011 01:11 AM
கிருஷ்ணகிரி: மஹாராஜகடை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து உரிமையாளரை கைது செய்தனர்.
மஹாராஜகடை எஸ்.ஐ., சாந்தமூர்த்தி மற்றும் போலீஸார் பேச்சப்பன்கொட்டாய் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியே மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸார் சோதனை செய்தனர். சோதனையில், பேச்சப்பன்கொட்டாய் ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. மணலுடன் டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையாளர் குண்டூரை சேர்ந்த சீனிவாசனை (35) கைது செய்தனர்.


