/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்
அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்
அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்
அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்
ADDED : அக் 09, 2011 12:29 AM
புதுச்சேரி : அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடக்கிறது.
கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, கூட்டுறவு ஒன்றியம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. நேற்று காலை 10 மணிக்கு 'கூட்டுறவு ஊடாக அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற தலைப் பில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாலை 3 மணிக்கு 'சமுதாய வளர்ச்சியில் கூட்டுறவு ஊடாக மகளிர் பங்களிப்பு' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கும், 'கூட்டுறவு ஊடாக அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற தலைப்பில் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கும் பேச்சுப் போட்டி நடந்தது.
இன்று காலை 'சுற்றுப்புற சூழலும் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் 3 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, 12ம் தேதி மாலை கூட்டுறவு கல்வியியல் கல்லூரி, கூட்டுறவு ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு கோலப்போட்டி நடக்கிறது.
15ம் தேதி காலை 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு கட்டுரைப் போட்டியும், கூட்டுறவு கல்வியியல் கல்லூரி, கூட்டுறவு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கூட்டுறவு மேலாண்மை நிலைய விரிவுரையாளர்களுக்கு விடுகதைப் போட்டியும் நடக்கிறது.
ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி 16ம் தேதியும், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 22ம் தேதி செஸ் போட்டியும், கூட்டுறவு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு போட்டி 29ம் தேதி நடக்கிறது.
வரும் 30ம் தேதி கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கு பல திறமைப் போட்டி நடக்கிறது. போட்டிகள் அனைத்தும், புதுச்சேரி மாநிலக் கூட்டுறவு ஒன்றியத்தில் நடக்கின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


