ADDED : அக் 07, 2011 10:33 PM
சிவகாசி : சிவகாசியில் காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, மாணிக்க தாகூர் எம்.பி., தலைமையில் நடந்தது.
மாவட்ட தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். வேட்பாளர் அசோகன் வரவேற்றார். தொழில் அதிபர் மகேஸ்வரன் திறந்து வைத்தார். நகர தொழில் அதிபர்கள் சண்முகம், ஹரிராம் அசோக், கிருஷ்ண மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேகோபால், நகர தலைவர் ராஜபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசி நகர ம.தி.மு.க., சார்பில் தேர்தல் அலுவலகத்தை மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம் திறந்து வைத்தார். நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜேஷ், வேட்பாளர் வேல்முருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


