Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கன்னியாகுமரியில் திருஓண கொண்டாட்டம் தாமிரபரணி ஆற்றில் படகுப்போட்டி

கன்னியாகுமரியில் திருஓண கொண்டாட்டம் தாமிரபரணி ஆற்றில் படகுப்போட்டி

கன்னியாகுமரியில் திருஓண கொண்டாட்டம் தாமிரபரணி ஆற்றில் படகுப்போட்டி

கன்னியாகுமரியில் திருஓண கொண்டாட்டம் தாமிரபரணி ஆற்றில் படகுப்போட்டி

ADDED : செப் 10, 2011 03:45 AM


Google News
நித்திரவிளை : குமரி மாவட்டத்தில் திருஓண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தாமிரபரணி ஆற்றில் படகுப்போட்டி நடந்தது.

திருஓண பண்டிகை கேரளாவை போன்று குமரி மாவட்ட மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நற்பணி மன்றங்கள், இளைஞர் அமைப்புகள் சார்பில் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. நித்திரவிளை அருகே வயக்கல்லூர் பருத்திக்கடவு இளைஞர் அணி சார்பில் நடந்த விழாவில் படகுப்போட்டி, அத்தப்பூக்களம், விளையாட்டு மற்றும் கலைப்போட்டிகள் இடம்பெற்றது. தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் இரயுமன்துறை பொழிமுக பகுதியில் இருந்து வயக்கல்லூர் பகுதிக்கடவு வரை ஆற்றில் படகுப்போட்டி நடந்தது.

இப்போட்டியில் ரெஞ்சித் தலைமையில் இப்போள் சுண்டன், கிச்சு தலைமையில் கேலக்ஸி சுண்டன், பினு தலைமையில் பிரண்ட்ஸ் சுண்டன், ஜெனீஷ் தலைமையில் தம்புரான் சுண்டன், பிரகலாதன் தலைமையில் பரக்காணி சுண்டன் ஆகிய ஐந்து படகுகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு படகிலும் 7 பேர் இருந்தனர். போட்டியை நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ஜேசுராஜ் துவக்கி வைத்தார். சுமார் 4.5 கி.மீ., தூரம் நடந்த இப்போட்டியில் அனைத்து படகுகளும் ஒன்றையொன்று முந்தி செல்ல கடுமையாக முயற்சி செய்தன. சுமார் 30 நிமிடம் நடந்த இப்போட்டியில் இறுதியாக பரக்காணி சுண்டன் முதலிடத்தையும், கோலக்ஸி சுண்டன் இரண்டாமிடத்தையும், இப்போள் சுண்டன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

வெற்றிபெற்ற அணியினருக்கு முதல் பரிசாக 2001 ரூபாய், இரண்டாவது பரிசாக 1501 ரூபாய், மூன்றாவது பரிசாக 1001 ரூபாய் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த நீச்சல் போட்டியில் 8 பேர் கலந்து கொண்டனர். இதில் ராஜேந்திரன் முதலிடத்தையும், ஸ்ரீஜித் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள், பண்பாட்டு போட்டிகள், கலைப்போட்டிகள் நடந்தன. மாலை பண்பாட்டு கருத்தரங்கம் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வயக்கல்லூர் தண்டான் சமுதாய சங்க தலைவர் மாதவன் தலைமை வகித்தார். ஸ்ரீதேவன் முன்னிலை வகித்தார். ஏழுதேசம் பஞ்., முன்னாள் தலைவர் செல்லசுவாமி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை வயக்கல்லூர் பருத்திக்கடவு இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us