/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வெளிநாட்டு மாணவர்களுக்கு தமிழ் வகுப்புகள் துவக்கம்வெளிநாட்டு மாணவர்களுக்கு தமிழ் வகுப்புகள் துவக்கம்
வெளிநாட்டு மாணவர்களுக்கு தமிழ் வகுப்புகள் துவக்கம்
வெளிநாட்டு மாணவர்களுக்கு தமிழ் வகுப்புகள் துவக்கம்
வெளிநாட்டு மாணவர்களுக்கு தமிழ் வகுப்புகள் துவக்கம்
ADDED : ஜூலை 24, 2011 12:05 AM
புதுச்சேரி : வெளிநாட்டு மாணவர்களுக்கான தமிழ்கோடை வகுப்பு நாளை துவங்குகிறது.
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் தமிழ் தெரியாத வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்கோடை வகுப்பு நடத்தி தமிழ் கற்றுக்கொடுத்து வருகிறது. இந்தாண்டிற்கான தமிழ் கோடை வகுப்பு துவக்க விழா அலியான்ஸ் பிரான்சே கலையரங்கில் நாளை காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. முதல்வர் ரங்கசாமி தமிழ் வகுப்பைத் துவக்கி வைக்கிறார். செப்டம்பர் 3ம் தேதி வரை நடக்கும் தமிழ்கோடை வகுப்பில் பிரான்ஸ், போலந்து, நார்வே, ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரியா நாடுகளைச் சேர்ந்த 11 பேர் கலந்து கொள்கின்றனர்.