/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிதம்பரத்தில் மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் நகை அபேஸ்சிதம்பரத்தில் மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் நகை அபேஸ்
சிதம்பரத்தில் மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் நகை அபேஸ்
சிதம்பரத்தில் மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் நகை அபேஸ்
சிதம்பரத்தில் மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் நகை அபேஸ்
ADDED : செப் 07, 2011 12:16 AM
சிதம்பரம் : சிதம்பரத்தில் கோவிலுக்கு வந்த கடலூரைச் சேர்ந்த மூதாட்டியிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பு நகைகளை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டித்தெருவைச் சேர்ந்தவர் ரமணன். விவசாயி. அவரது மனைவி லலிதா, 60. நேற்று சிதம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு நடராஜர் கோவிலுக்கு சுவாமி கும்பிடச் சென்றார். மதியம் தெற்கு சன்னதி ராஜகோபுரம் அருகே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் நடுத்தர வயது பெண் ஒருவர் அவரிடம் பேசிக் கொண்டே அவரது கழுத்தில் இருந்த தாலிச்செயின், வளையல் ஆகியவற்றை அபேஸ் செய்து கொண்டு தலைமறைவானார். மூதாட்டி பறிகொடுத்த நகைகளின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். மூதாட்டி லலிதா கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


