Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தபால்தலை சேகரிப்பு தினம் தூத்துக்குடியில் தபால்தலை கண்காட்சி

தபால்தலை சேகரிப்பு தினம் தூத்துக்குடியில் தபால்தலை கண்காட்சி

தபால்தலை சேகரிப்பு தினம் தூத்துக்குடியில் தபால்தலை கண்காட்சி

தபால்தலை சேகரிப்பு தினம் தூத்துக்குடியில் தபால்தலை கண்காட்சி

ADDED : அக் 13, 2011 05:26 AM


Google News
தூத்துக்குடி:தபால்தலை சேகரிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் தபால்தலை கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் உலகில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பென்னிபிளாக் உட்பட பல்வேறு தபால் தலைகள் இடம்பெற்றிருந்தன.இந்திய அஞ்சல்துறை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9ம் முதல் 14ம் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு 10ம் தேதி தூத்துக்குடியில் உள்ள தலைமை தபால் ஆபிசில் 'சேமிப்பு பாங்க் கணக்கு தினம்' கொண்டாடப்பட்டது. இதில் சேமிப்பு ஏஜெண்டுகள், சேமிப்பு கணக்காளர்கள் மற்றும் அஞ்சலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். 11ம் தேதி 'தபால் நாள்' கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் தலைமை தபால் ஆபிசிற்கு வருகை தந்து தபால் ஆபிஸ் செயல்படும் வீதம், அதன் நடைமுறைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் பற்றி அறிந்து கொண்டனர். நேற்று 'தபால் சேகரிப்பு நாள்' கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சுப்பையா வித்யாலயா பள்ளியில் தபால் தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கண்காட்சியில் உலகில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பென்னிபிளாக் தபால் தலை முதல் பல்வேறு அரிய தபால்தலைகள் வைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியை முத்துநகர் தபால்தலை சேகரிப்போர் கழக புரவலர் டாக்டர் ரவீந்திரன் தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற முதுநிலை கண்காணிப்பாளர் ஜோசப் அருள்ராஜ், பள்ளி ஆலோசகர் செல்வராஜ், போஸ்டல் பிஆர்ஓ., ஜெபக்குமார், அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் அந்தோணிராஜன், சுப்பையா வித்யாலயா பள்ளி தலைமையாசிரியர் தனலட்சுமி, இடையர்காடு குட்ஷெப்பர்டு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெபராஜ் மைக்கேல் மற்றும் அஞ்சல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் இடையர்காடு குட்ஷெப்பர்டு பள்ளி முதல் இடத்தையும், சுப்பையா வித்யாலயா பள்ளி இரண்டாம் இடத்தையும், விகாசா பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us