Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடியில் இன்று முதல்வர் ஜெ.,பிரசாரம்அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் இன்று முதல்வர் ஜெ.,பிரசாரம்அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் இன்று முதல்வர் ஜெ.,பிரசாரம்அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் இன்று முதல்வர் ஜெ.,பிரசாரம்அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

ADDED : அக் 13, 2011 05:27 AM


Google News
தூத்துக்குடி:தூத்துக்குடியில் இன்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெ.,இன்று மதியம் பிரசாரம் செய்கிறார். இதனால் அதிமுகவினர் கடும் உற்சாகமடைந்துள்ளனர்.தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் சசிகலாபுஷ்பா மற்றும் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெ.,இன்று தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.இன்று காலை 10 மணிக்கு மேல் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் வந்து முதல்வர் ஜெ.,இறங்குகிறார். அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்கின்றனர். பின்னர் விமானத்தின் அருகே தயார் நிலையில் இருக்கும் ஹெலிகாப்டரில் ஏறி ஏ.பி.சி மகாலட்சுமி கல்லூரி எதிரே உள்ள ஜோதிபுரம் ஹெலிபேடில் வந்து ஜெ.,இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் எட்டயபுரம் ரோடு வழியாக 3ம் கேட் மேம்பாலம், ஜெயராஜ் ரோடு, காய்கறிமார்கெட், அரசு ஆஸ்பத்திரி மெயின் ரோடு, வி.வி.டி சிக்னல் வழியாக அண்ணாநகர் மெயின் ரோட்டிற்கு வருகிறார். அங்கு முதல்வர் பேசுவதற்காக தனியாக பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நிபுணர் குழுவினர் வந்து நேற்று மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரெடிமேட் மேடை என்பதால் நேற்று மாலைக்குள் மேடை தயாராகிவிட்டன. உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து அதனை ஆய்வு செய்தனர். முதல்வர் பேசும் மேடை க்கு அருகில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளர் சசிகலா புஷ்பா மற்றும் 60 மாநகராட்சி அதிமுக வார்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நிற்பதற்கு தனியாக அகல மேடை அமைக்கப்பட்டுள்ளது.

அதில் அவர்கள் நிற்பார்கள். முதல்வர் ஜெ.,அவர்களை ஆதரித்து பேசுகிறார். 12.30 மணிக்கு மேடைக்கு வந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். சுமார் ஒரு மணி நேரம் வரை பிரசாரம் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு அங்கிருந்து டூவிபுரம், 3ம் கேட் பாலம் வழியாக ஜோதிபுரம் ஹெலிபேடு செல்லும் முதல்வர் அங்கிருந்து நெல்லை தேர்தல் பிரசாரத்திற்கு முதல்வர் செல்கிறார். முதல்வர் ஜெ.,தூத்துக்குடிக்கு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு வருவதால் அதிமுக தொண்டர்கள் கடும் குஷியடைந்துள்ளனர். அதுவும் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை முதல்வர் தூத்துக்குடியில் இருந்து முதல், முதலாக துவக்குவது கூடுதல் உற்சாகத்தை அதிமுகவினர் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் முதல்வர் ஜெ.,தூத்துக்குடி வருகையை ஒட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்வது குறித்து நேற்று சுகம் ஓட்டலில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அமைச்சர் சண்முகநாதன் தலைமையில் அமைச்சர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் நடந்தது. வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளரும், அரசு வக்கீலுமான சேகர் வரவேற்றார். தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் சசிகலாபுஷ்பா, எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் சின்னத்துரை, முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, நகர செயலாளர் ஏசாதுரை, சிறுபான்மை பிரிவு செயலாளர் டேனியல்ராஜ், விஜயநாராயணம் மூர்த்தி, ஐ.ஏ.எஸ் இலவச பயிற்சி மைய நிர்வாகி பாலசுப்பிரமணியன், வக்கீல் ராபின் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்வர் ஜெ.,யை வரவேற்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இருந்து அதிமுகவினர் திரளாக வேன், கார்களில் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. கட்சியினர் ஒற்றுமையாக தேர்தலில் பணியாற்றி அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர் அமைச்சர் சண்முகநாதன் கேட்டுக் கொண்டார். கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக நிற்பவர்கள் மீது தேர்தல் முடிந்த பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது. முதல்வர் இன்று தூத்துக்குடி வருகையை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டுள்ளது. முதல்வர் மேடை அருகே நேற்றே அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us