/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/"ரியல் எஸ்டேட்' எஸ்.ஐ., மோசடியில் சிக்கினார்"ரியல் எஸ்டேட்' எஸ்.ஐ., மோசடியில் சிக்கினார்
"ரியல் எஸ்டேட்' எஸ்.ஐ., மோசடியில் சிக்கினார்
"ரியல் எஸ்டேட்' எஸ்.ஐ., மோசடியில் சிக்கினார்
"ரியல் எஸ்டேட்' எஸ்.ஐ., மோசடியில் சிக்கினார்
ADDED : செப் 08, 2011 10:19 PM
திண்டுக்கல் : ரியல் எஸ்டேட் புரோக்கராக செயல்பட்டு, கமிஷன் மோசடி செய்த சிறப்பு எஸ்.ஐ., மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்த நில புரோக்கர் சந்திரன், மாவட்ட குற்றப்பிரிவில் அளித்துள்ள புகார் மனு: திண்டுக்கல் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ., கிருஷ்ணன், அப்துல்ஹாக், பெரியசாமி, சேகருடன் இணைந்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்தேன். திண்டுக்கல் பை பாஸ் ரோடு அருகே மீரான் என்பவரது ஒரு ஏக்கர் நிலத்தை விற்றதால், 50 லட்ச ரூபாய் கமிஷன் கிடைத்தது. இதில் எனது பங்கு, 10 லட்சத்தை தரவில்லை. 'பணம் தரமுடியாது', என, எஸ்.ஐ., மிரட்டல் விடுத்தார். என்னிடம் வாங்கிய 25,000 ரூபாயையும் தரவில்லை என, தெரிவித்திருந்தார். எஸ்.ஐ., உட்பட ஐந்து பேர் மீது, இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிந்துள்ளார்.


