Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/அமெரிக்காவில் இருமடங்கு பாதுகாப்பு

அமெரிக்காவில் இருமடங்கு பாதுகாப்பு

அமெரிக்காவில் இருமடங்கு பாதுகாப்பு

அமெரிக்காவில் இருமடங்கு பாதுகாப்பு

ADDED : செப் 09, 2011 11:03 PM


Google News
Latest Tamil News

வாஷிங்டன் : அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட, 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இரு மடங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி, அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில், இரட்டை வர்த்தக கோபுரம், ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இடங்களில், 10 ஆண்டுகளுக்கு முன், பயங்கரவாதிகள், விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தின், 10ம் ஆண்டு நினைவு தினம், நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த போவதாக, சில அனாமதேய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. இதை பொருட்படுத்தாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரு மடங்கு பாதுகாப்புடன் செயல்படும் படி, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். மக்களும் விழிப்புணர்வோடு நடந்து கொள்ளும் படி, நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளும்பர்க் அறிவுறுத்தியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us