/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வேளாண் துறை அமைச்சர் தகவல்டி.ஏ.பி., பற்றாக்குறை குறித்து பிரதமருக்கு கடிதம்வேளாண் துறை அமைச்சர் தகவல்டி.ஏ.பி., பற்றாக்குறை குறித்து பிரதமருக்கு கடிதம்
வேளாண் துறை அமைச்சர் தகவல்டி.ஏ.பி., பற்றாக்குறை குறித்து பிரதமருக்கு கடிதம்
வேளாண் துறை அமைச்சர் தகவல்டி.ஏ.பி., பற்றாக்குறை குறித்து பிரதமருக்கு கடிதம்
வேளாண் துறை அமைச்சர் தகவல்டி.ஏ.பி., பற்றாக்குறை குறித்து பிரதமருக்கு கடிதம்
ADDED : ஆக 04, 2011 02:21 AM
நாமக்கல்: ''சிறிய இயந்திரம் மூலம் கரும்பு வெட்டுவதற்கான ஆய்வு நடந்து
வருகிறது. டி.ஏ.பி., உரப்பற்றாக்குறை குறித்து பிரதமருக்கு, முதல்வர்
கடிதம் அனுப்பியுள்ளார்,'' என, வேளாண் துறை அமைச்சர் செங்கோட்டையன்
பேசினார்.நாமக்கல் மாவட்ட கூட்ட அரங்கில், வேளாண் துறை ஆய்வுக் கூட்டம்
நடந்தது. வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகித்து
பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், தேசிய தோட்டக்கலை செயல்படுத்துவதற்கு,
மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் பல்கலை
மூலம் வாழை பயிரிடுபவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்க, ஒரு வார
காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில், நேரடிக் கொள்முதல்
நிலையம் ஏற்படுத்துவது குறித்து, முதல்வர் கவனத்துக் கொண்டு
செல்லப்படும்.சிறிய இயந்திரம் மூலம் கரும்பு வெட்டுவதற்கான ஆய்வு நடந்து
வருகிறது. டி.ஏ.பி., உரம் பற்றாக்குறை குறித்து பிரதமருக்கு, முதல்வர்
கடிதம் அனுப்பியுள்ளார். சொட்டுநீர் பாசனம் அமைக்க, 100 சதவீதம் மானியம்
வழங்கப்படுகிறது. எந்தப் பகுதியில், எந்தவிதமான பயிர் சாகுபடி செய்தால்,
அதிக மகசூல் பெற முடியும் என்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வட்டார வேளாண் அலுவலர்கள், தங்கள் ஆய்வு செய்யும் பகுதியை முன்கூட்டியே
அறிவித்து செயல்பட வேண்டும். அனைத்து உரம், பூச்சி மருந்துகளுக்கு அரசு வரி
விலக்கு அளித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.வருவாய்த்துறை அமைச்சர்
தங்கமணி, சட்டசபை துணை சபாநாயகர் துரைசாமி, எம்.எல்.ஏ., பாஸ்கர்,
வேளாண்துறை கமிஷனர் சந்தீப் சக்சேனா, வேளாண் வணிக கமிஷனர் கலியபெருமாள்,
தோட்டக்கலைத்துறை கமிஷனர் செல்லமுத்து, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் உட்பட
பலர் பங்கேற்றனர்.


