/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வாக்காளர்களுக்கு ஓட்டு சீட்டு வினியோகம்வாக்காளர்களுக்கு ஓட்டு சீட்டு வினியோகம்
வாக்காளர்களுக்கு ஓட்டு சீட்டு வினியோகம்
வாக்காளர்களுக்கு ஓட்டு சீட்டு வினியோகம்
வாக்காளர்களுக்கு ஓட்டு சீட்டு வினியோகம்
ADDED : அக் 10, 2011 02:49 AM
கூடலூர் : கூடலூர் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஓட்டு சீட்டு வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் முன்பு நடந்த சட்ட சபை தேர்தலில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் தங்களின் சின்னத்துடன் கூடிய ஓட்டு சீட்டு வழங்கி வந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலிலும், வாக்காளர்களுக்கு புகை படத்துடன் கூடிய ஓட்டு சீட்டு வழங்கப்படுகிறது. இதன்படி, கூடலூர் சட்ட சபைக்கு உட்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி முதல் தேர்தல் ஆணையத்தின் சார்பில் புகை படத்துடன் கூடிய ஓட்டு சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓட்டு சீட்டு கிடைக்காதவர்களுக்கு தேர்தல் நாளில் ஓட்டு சாவடி அருகே, ஓட்டு சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


