
'ரொம்ப ஓவரா தெரியலை...!'
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சமீபத்தில், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
'கால் ஒடிஞ்சாலும்...!'
ஆசிரியர் தினத்தையொட்டி, நல்லாசிரியர்களுக்கு தமிழக அரசின், 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கும் விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா பேசும்போது, 'நானும் ஒரு காலத்தில் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி உள்ளேன். அதனால் தான், சொல்லவரும் விஷயத்தை பிறருக்கு புரியும்படி வெளிப்படுத்தும் திறன் எனக்கு வளர்ந்தது. மாதக்கணக்கில் விடுமுறையை அனுபவிக்கும் ஆசிரியர்களை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கும். நாம் கூட பேசாமல் விரிவுரையாளராகவே இருந்திருக்கலாமோ என, எண்ணத் தோன்றும். தற்போதுள்ள பணியில், கால் ஒடிந்தாலும், 'பைல்' பார்க்க வேண்டியுள்ளது' என்றார். விழாவில் பங்கேற்ற பார்வையாளர் ஒருவர், 'மெடிக்கல் லீவிலும், இவர் வீட்டுல, 'ஆபீஸ் பைல்'களை பார்த்திருப்பாரோ? அந்த ஆதங்கத்துல தான் இப்படி பேசுறாரு போலிருக்கு...' என, 'கமென்ட்' அடித்துச் சென்றார்.


