Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஒரே நாளில் ஜவுளி விற்பனை 80 சதம் உயர்வு

ஒரே நாளில் ஜவுளி விற்பனை 80 சதம் உயர்வு

ஒரே நாளில் ஜவுளி விற்பனை 80 சதம் உயர்வு

ஒரே நாளில் ஜவுளி விற்பனை 80 சதம் உயர்வு

ADDED : அக் 12, 2011 01:39 AM


Google News
ஈரோடு: தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களே மிச்சமுள்ள நிலையில், நேற்று ஈரோடு ஜவுளி சந்தை களைகட்டியது. வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்ததால், ஜவுளி விற்பனை 80 சதவீதம் அதிகரித்துள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், மாநகரில் உள்ள ஜவுளிக் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று கூடிய ஈரோடு ஜவுளி சந்தையில், சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள், ஜவுளி கொள்முதல் செய்ய குவிந்தனர். குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள், வெஸ்டன் டிரஸ், பெண்களுக்கான கோல்டு பிரிண்டிங், ஜமிக்கி, ஸ்டோன் ஒர்க் சேலைகள், காட்டன் சேலைகள், சுடிதார், பட்டேலா டிரஸ், ஜீன்ஸ் பேன்ட், டாப்ஸ் மற்றும் ஆடவர்களுக்கான வேட்டி, சட்டை உள்பட விதவிதமான ஆடைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.நேற்று ஈரோடு கனி மார்க்கெட்டில் சந்தை துவங்கிய அதிகாலை 5 மணியில் இருந்தே, வெளிமாநிலம் மற்றும் உள்ளூர் சில்லரை வியாபாரிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.

திருவேங்கடசாமி வீதி, பி.எஸ்.பார்க், பிரப் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.ஜவுளி வியாபாரி ஒருவர் கூறியதாவது:நேற்று முன்தினம் பி.பி.அக்ரஹாரம், சென்ட்ரல் தியேட்டர் தனியார் பனியன் மார்க்கெட்டில் வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனையும் மந்தமாக காணப்பட்டது. இன்று (11ம் தேதி) இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கனி மார்க்கெட்டுக்கு அதிகாலை 5 மணியில் இருந்தே மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் அதிகமாக வந்திருந்தனர்.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானத பிரச்னை வலுப்பெற்று வருவதால், ஆந்திர மாநில ஜவுளி வியாபாரிகள் எவரும் வரவில்லை. மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் ஈரோட்டுக்கு வந்து ஜவுளி கொள்முதல் செய்தனர்.பொதுமக்களும் குடும்பத்துடன் வந்து தங்களுக்கு பிடித்தமான துணிகளை சில்லறை விலைக்கு அதிகமாக வாங்கி செல்கின்றனர். நேற்று மட்டும் 80 சதவீதம் ஜவுளி விற்பனையானது. இன்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us