/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உப்பனாற்றில் தேங்கியுள்ள தண்ணீரை 2 நாட்களில் திறந்துவிட அதிகாரிகள் உறுதிஉப்பனாற்றில் தேங்கியுள்ள தண்ணீரை 2 நாட்களில் திறந்துவிட அதிகாரிகள் உறுதி
உப்பனாற்றில் தேங்கியுள்ள தண்ணீரை 2 நாட்களில் திறந்துவிட அதிகாரிகள் உறுதி
உப்பனாற்றில் தேங்கியுள்ள தண்ணீரை 2 நாட்களில் திறந்துவிட அதிகாரிகள் உறுதி
உப்பனாற்றில் தேங்கியுள்ள தண்ணீரை 2 நாட்களில் திறந்துவிட அதிகாரிகள் உறுதி
ADDED : ஆக 30, 2011 11:49 PM
கடலூர் : சுபஉப்பலவாடி உப்பனாற்றில் தேங்கியுள்ள தண்ணீரை 2 நாட்களில் திறந்து விட அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
கடலூர் குண்டுஉப்பலவாடியில் இருந்து கண்டக்காடு செல்லும் ஆற்றில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக பாலத்தின் அடிப்பகுதி முழுவதும் அணை போட்டு தண்ணீர் போக்குவரத்தின்றி தடுக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பாய்ந்து வடியும் தன்மை இல்லாததால் ஆறு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் பாகூரில் இருந்து வரும் தண்ணீர் முள்ளோடை வடிகால் வாய்க்கால் வழியாக உப்பனாற்றில் கலக்கிறது. இதனால் தடைபட்டுள்ள உப்பனாற்றில் தண்ணீரின் மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது. இதனால் உப்பனாற்றைச் சுற்றியுள்ள மதிகிருஷ்ணாவரம், உச்சிமேடு, நாணமேடு, சுபஉப்பலவாடி, மூர்த்திக்குப்பம் கொரவல்லிமேடு உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் 'களர்' நிலமாக மாறி வருகிறது. இது பற்றி சுபஉப்பலவாடி மற்றும் அருகில் உள்ள விவசாயிகள் இணைந்து கலெக்டரிடம் 3 முறை மனு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் அசோகன் (வேளாண்மை), வேளாண்மை அலுவலர் பூவராகன் ஆகியோர் கிராமங்களில் பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டு கண்டக்காட்டில் மேம்பாலம் கட்டிவரும் ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அடித்தளத்தில் கான்கிரீட் பணி முடிவடைய இருப்பதால் 2 நாட்களில் தடைசெய்யப்பட்ட தண்ணீரை திறந்து விடுவதாக உறுதியளித்தார்.


