/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கொடிசியா, பி.எஸ்.என்.எல்.,லுடன் ஸ்ரீகுரு கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்கொடிசியா, பி.எஸ்.என்.எல்.,லுடன் ஸ்ரீகுரு கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
கொடிசியா, பி.எஸ்.என்.எல்.,லுடன் ஸ்ரீகுரு கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
கொடிசியா, பி.எஸ்.என்.எல்.,லுடன் ஸ்ரீகுரு கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
கொடிசியா, பி.எஸ்.என்.எல்.,லுடன் ஸ்ரீகுரு கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஆக 28, 2011 11:48 PM
சரவணம்பட்டி : கோவை, ஸ்ரீகுரு கல்லூரி, கொடிசியா மற்றும் பி.எஸ்.என்.எல்.,
நிறுவனங்களுடன் தொழில் மற்றும் தகவல் தொடர்பு துறை கல்விக்கான
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
கோவை, வரதையங்கார்பாளையத்தில்
ஸ்ரீகுரு தொழில்நுட்பக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில்
படிக்கும் மாணவர்கள், தொழில் துறையினருடன் இணைந்து பயிற்சி பெறவும்,
கல்லூரியில் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது. விழாவில், கொடிசியா தலைவர் கந்தசாமி பேசுகையில்,
''மாணவர்கள், படிக்கும்போதே தொழில் சார்ந்த அறிவை பெற வேண்டியது அவசியம்.
கல்வியோடு, தகவல் தொழில் தொடர்புகளை எளிதாக்கிக் கொள்ள ஆங்கிலத்தை அவசியம்
கற்க வேண்டும். தினமும் செய்தித்தாள்களை படிப்பதால், உலக நடப்புகளை
அறிந்து, விழிப்புணர்வோடு செயல்பட முடியும். எந்த தொழிலை செய்தாலும் அதை
ஈடுபாட்டுடன் முழுமையாக, கடவுள் நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.
மாணவர்கள்விரும்பினால் படிக்கும்போதே சிறு தொழில் தொடங்க கொடிசியா
வழிகாட்டும்,'' என்றார். கொடிசியா ஒப்பந்தத்தில், கல்லூரி முதல்வர்
அன்புச்செழியன், கொடிசியா தலைவர் கந்தசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் தகவல் தொழில்நுட்பம் குறித்த ஒப்பந்தத்தில்
கல்லூரி முதல்வர் அன்புச்செழியன், பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர்
ஹரிபாபு ஆகியோர் கையெழுத்திட்டனர். கோவை பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது
மேலாளர் ஹரிபாபு பேசுகையில், ''இதுவரை 20 ஆயிரம் இணைப்புகள் இணைக்கப்பட்டு,
பல்வேறு தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள், திறம்பட புராஜக்ட் மேற்கொள்வதற்கு பி.எஸ்.என்.எல்., உதவும்,''
என்றார்.


