ADDED : ஜூலை 26, 2011 12:23 AM
திருச்சி: திருச்சியில் பசுமை தாயகம் சார்பில் சாலை விபத்துக்களை தடுக்க வலியுறுத்தி மனித சங்கிலிப் பேராட்டம் நேற்று நடந்தது.
சத்திரம் பஸ் ஸ்டாண்ட், சிந்தாமணி, அண்ணாசிலை அருகே நடந்த இந்த போராட்டத்தில் பா.ம.க., நிர்வாகி அறிவுசெல்வன் தலைமை வகித்தார். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், சாலை விபத்துக்களை தடுக்க தெளிவான கொள்கையும், சட்டமும் தேவை, சாலை விதிகளை முழுமையா கடைபிடிக்க வேண்டும், ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.