/உள்ளூர் செய்திகள்/மதுரை/சுதந்திர தின அணிவகுப்பு : என்.சி.சி., மாணவர்களுக்கு பயிற்சிசுதந்திர தின அணிவகுப்பு : என்.சி.சி., மாணவர்களுக்கு பயிற்சி
சுதந்திர தின அணிவகுப்பு : என்.சி.சி., மாணவர்களுக்கு பயிற்சி
சுதந்திர தின அணிவகுப்பு : என்.சி.சி., மாணவர்களுக்கு பயிற்சி
சுதந்திர தின அணிவகுப்பு : என்.சி.சி., மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 26, 2011 12:41 AM
உசிலம்பட்டி : தமிழ்நாடு என்.சி.சி., சார்பில் டில்லியில் நடைபெறும் சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
கல்லூரியில் நடந்து வருகிறது.
இந்த முகாமில் சென்னை 'எ', சென்னை 'பி', கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, புதுச்சேரி ஆகிய என்.சி.சி., பட்டாலியன்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 140 என்.சி.சி., மாணவ மாணவியர்கள் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு அணிவகுப்பு, மலையேற்றம், துப்பாக்கி சுடுதல், நிலவரைபடத்தின் மூலம் குறிப்பிட்ட இலக்கை அடைவது, முதலுதவி உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. திண்டுக்கல் 14வது பட்டாலியன் லெப்டினன்ட் கேனல் வேணுகோபால் மேனன் தலைமையில் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த மாணவர்கள் தவிர மேலும் 350 என்.சி.சி., மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.