/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/வெற்றிலை வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டுவெற்றிலை வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டு
வெற்றிலை வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டு
வெற்றிலை வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டு
வெற்றிலை வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டு
ADDED : அக் 11, 2011 02:17 AM
திருவாரூர்: திருவாரூர் அருகே வெற்றிலை வியாபாரி வீட்டில் கதவை உடைத்து ஐந்து லட்சம் மதிப்புள்ள 25 பவுன் நகை மற்றும் எல்.சி.டி., 'டிவி'யை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.திருவாரூர், பேரளம் அருகே உள்ள கந்தங்குடியை சேர்ந்தவர் ஜியாவுதீன்.
இவர் தமிழகம் முழுவதும் வெற்றிலை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு சென்னை ஆழ்வார் பேட்டையிலும் உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குடும்பத்துடன் சென்னை சென்று விட்டார்.நேற்று முன்தினம் (9ம் தேதி) இரவு மர்ம நபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் எல்.சி.டி., 'டிவி' ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். நேற்று காலை ஜியாவுதீன் உறவினர், வீடு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஜியாவுதீனுக்கு தகவல் தெரிவித்தார்.இந்த கொள்ளை குறித்து பேரளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.ஜியாவுதீன் காங்கிரஸ் கட்சியில் சிறுபான்மை பிரிவு மாநில தலைவராக உள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் 'டிவி'யின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் என போலீஸார் தெரிவித்தனர்.


