ADDED : செப் 06, 2011 11:53 AM
சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்துவருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்று கன மழை பெய்தது. இதனால் கபிணி கே.ஆர்.எஸ். அணை, மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 89.200 கனஅடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று 91.600 கனஅடியாக உயர்ந்துள்ளது. நேற்று அணைக்கு 55.036 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 65 ஆயிரம் கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 92.60 அடியாக உயர்ந்துள்ளது.


