/உள்ளூர் செய்திகள்/கரூர்/உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய தி.மு.,க.,-காங்., நிர்வாகிகள்உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய தி.மு.,க.,-காங்., நிர்வாகிகள்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய தி.மு.,க.,-காங்., நிர்வாகிகள்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய தி.மு.,க.,-காங்., நிர்வாகிகள்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய தி.மு.,க.,-காங்., நிர்வாகிகள்
ADDED : அக் 12, 2011 02:21 AM
குளித்தலை: குளித்தலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளாக பதவியில் இருந்த பெரும்பாலான தி.மு.க., மற்றும் காங்., கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் 'டிமிக்கி' கொடுத்து ஒதுங்கி விட்டனர்.
புதியதாக சீட் கிடைத்துள்ள தி.மு.க., மற்றும் காங்., தொண்டர்கள் வைட்டமின் 'ப' இல்லாதால் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் அ.தி.மு.க., அர சு முழு ஆதரவுடன் ஆட்சி நடந் து வருவதாலும், உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவதாலும் தி.மு.க., காங்., சார்பில், கடந்த ஐந்தாண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் இருந்த பலர், தற்போது நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் தே õல்வி பயத்தில் நைசாக நழுவி 'டிமிக்கி' கொடுத்துள்ளனர். குறிப்பாக, குளித்தலை பஞ்சாயத்த யூனியன் குழு தலைவராக இருந்த வனிதா (காங்.,), து ணைத்தலைவராக இருந்த மாவ ட்ட விவசாய அணி அமைப்பாளர் கந்தசாமி, தோகமலை யூனியன் குழு தலைவர் கண்ணன், தோகமலை தி.மு.க., ஒன்ற்றிய செயலாளரும், யூனியன் கவுன்சிலருமான ராமர், தோகமலை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், யூனியன் கவுன்சிலருமான கர்ணன் ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோல், குளித்தலை யூனியன் கவுன்சிலரான செல்வம் (தி.மு.க.,), விஜயலட்சுமி, ஆனந்தி (காங்.,), குளித்தலை நகராட்சி கவுன்சிலர் சொக்கன் (தி.மு.க.,) மற்றும் மருதூர், நங்கவரம் டவுன் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கு சிலர் போட்டியிட முன் வரவில்லை. மேலும், இதில் சிலர் போட்டியிட வாய்ப்பு கேட்டும் தி.மு.க., மாவட்ட நிர்வாகம் சீட் வழங்க முன் வரவில்லை. ஆனால் ஆளும் கட்சியான அ.தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து தி.மு.க.,- காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., கட்சிகள் சார்பில் புதிய வேட்பாளர்களை களம் இறக்க்கியுள்ளது. ஆட்சி பலத்தில் பசையாக உள்ள அ.தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட வைட்டமின் 'ப' பற்றாக்குறையால் தி.மு .க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திண்டாடி வருகின்றனர்.


