/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளனம் தர்ணாதேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளனம் தர்ணா
தேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளனம் தர்ணா
தேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளனம் தர்ணா
தேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளனம் தர்ணா
ADDED : செப் 04, 2011 11:13 PM
கடலூர் : தேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட சங்கம் சார்பில் கடலூரில் தர்ணா நடந்தது.
மாவட்டத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். கிளைச் செயலர் மகேஸ்வரன் வரவேற்றார். அகில இந்திய செயலர் ஜெயராமன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலர் சுந்தரமூர்த்தி நிறைவுரையாற்றினார். மாநில அமைப்புச் செயலர் ஸ்ரீதர், மாவட்டச் செயலர் ஆனந்தன், பொருளாளர் மஞ்சினி, மாநிலத் தலைவர் தமிழ்மணி, உதவித் தலைவர் ஜெயபால் உட்பட பலர் பங்கேற்றனர். கிளைச் செயலர் வினாயகமூர்த்தி வரவேற்றார். தர்ணாவில், புதிதாக பணியமர்த்தப்படும் டெலிகாம் மெக்கானிக்குகளை மாவட்ட நிர்வாகம் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தியது போல் பொட்டியம், வெள்ளிமலை, சேராப்பட்டு போன்ற உரிமை கால பணியிட (டெனியூர்) பகுதிகளில் பயன்படுத்த வேண்டும். உடல் நிலைபாதிக்கப்பட்ட நிலையிலும் டெனியூர் பகுதிகளில் பணிபுரியம் டெலிகாம் மெக்கானிக்களுக்கு பரிவு அடிப்படையில் விருப்ப மாற்றல் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


