தயாநிதி குற்றமற்றவர் என கூறவில்லை: சி.பி.ஐ., மறுப்பு
தயாநிதி குற்றமற்றவர் என கூறவில்லை: சி.பி.ஐ., மறுப்பு
தயாநிதி குற்றமற்றவர் என கூறவில்லை: சி.பி.ஐ., மறுப்பு
ADDED : செப் 08, 2011 05:23 PM
புதுடில்லி: 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி குற்றமற்றவர் என தாங்கள் கூறவில்லை என சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
2ஜி மோசடி வழக்கில், தயாநிதிக்கு எதிரான விசாரணையை சி.பி.ஐ., நேர்மையான முறையில் நடத்த வில்லை என்றும், அதில் அக்கறை காட்டவில்லை எனவும், அவரிடம்உரிய முறையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள சி.பி.ஐ., தயாநிதியை குற்றமற்றவர் என தாங்கள் கூறவில்லை எனவும், அவர் மீதான விசாரணை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.


