Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி

தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி

தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி

தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி

ADDED : ஆக 03, 2011 11:07 PM


Google News
அனுப்பர்பாளையம் : அனுப்பர்பாளையம் பகுதியில் தொடர் வழிப்பறி, திருட்டால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஜூன் மாதம் வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி அதிக அளவில் நடந்துள்ளன. ஜூன் முதல் தேதி, வஞ்சிபாளையம் ஸ்ரீசாமி நகர் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சுதா (30), வீட்டில் குழந்தைகளுடன் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் வீட்டுக்குள் புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சுதாவிடம் இருந்து மூன்று பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றான். 12ம் தேதி, 15 வேலம்பாளையம் அமர்ஜோதி கார்டன் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (47), குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்து 4.5 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பாத்திரங்களை திருடிச்சென்றனர். கடந்த 18ம் தேதி பிச்சம்பாளையம் பாப்பா நகர் முதல் வீதியை சேர்ந்த தங்கராசு(39) வீட்டில், பீரோவில் இருந்த 4.5 பவுன் நகையை யாரோ திருடிச் சென்றுள்ளனர். 28ம் தேதி அனுப்பர்பாளையம் குபேரபுரி நகர் பகுதியை சேர்ந்த மதிவாணன் (48) குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது, 6.5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ருபாய் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். 31ம் தேதி திருப்பூர் அங்கேரிபாளையம் பரத்தோட்டம் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (52), செட்டிபாளையம் ரோட்டில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த ஒருவன் மூன்று பவுன் செயினை பறித்துச் சென்றான். இதுபோக, இரு சக்கர வாகன திருட்டுகளும் அதிக அளவில் நடந்துள்ளன. இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவில்லை. 15 வேலம்பாளையம் நகராட்சி, செட்டிபாளையம், தொட்டிபாளையம் ஊராட்சி, போயம்பாளையம், கணியாம்பூண்டி என, அதிக பகுதிகளை கொண்ட அனுப்பர் பாளையம் பகுதியில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஏட்டு, ஒரு போலீஸ் என மூன்று பேர் மட்டுமே உள்ளனர். ஆள் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கைது செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது. குற்றப்பிரிவு போலீசார் திருட்டு வழக்கு விசாரணையில் இருக்கும்போது, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அவர்களையே பாதுகாப்புக்கு பயன்படுத்துவதால். விசாரணை பாதிக்கப்படுகிறது.போலீஸ் பற்றாக்குறையால் இரவு ரோந்து பாதிப்பதால், திருடர்களுக்கு சாதகமாகி விடுகிறது. தொடர் திருட்டு, வழிப்பறியால் அனுப்பர்பாளையம் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே, கூடுதல் போலீசாரை நியமித்து, திருட்டு, வழிப்பறியை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us