Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காங்., வேட்பாளருக்கு மூன்று கட்சிகள் ஆதரவு

காங்., வேட்பாளருக்கு மூன்று கட்சிகள் ஆதரவு

காங்., வேட்பாளருக்கு மூன்று கட்சிகள் ஆதரவு

காங்., வேட்பாளருக்கு மூன்று கட்சிகள் ஆதரவு

ADDED : அக் 04, 2011 01:55 AM


Google News
புதுச்சேரி : இந்திரா நகர் இடைத் தேர்தலில் காங்., வேட்பாளரை ஆதரிக்க தேசியவாத காங்., இந்திய குடியரசு கட்சி, படைப்பாளி மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளன.தேசியவாத காங்., தலைவர் சுந்தரமூர்த்தி, இந்திய குடியரசு கட்சித் தலைவர் ரத்தினவேலு, படைப்பாளி மக்கள் கட்சித் தலைவர் தங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திரா நகர் இடைத் தேர்தல் குறித்து காங்., கூட்டணி கட்சிகளான நாங்கள், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினோம். அவர் கேட்டுகொண்டதற்கிணங்க, இடைத் தேர்தலில் காங்., வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து தேர்தல் பணி செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.வரும் 7ம் தேதியிலிருந்து மத்திய அமைச்சர் மற்றும் காங்., வேட்பாளருடன் இணைந்து ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது.சட்டசபை தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றத் தவறியதையும், நடக்கும் ஆட்சியின் செயலற்ற தன்மையை பிரசாரத்தின்போது மக்களிடம் விளக்கி கூறுவோம்.

கடந்த நான்கு மாதங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, கொலைகள் நடப்பதை பார்த்து மக்கள் அச்சமுடன் வாழ்கின்றனர். எனவே, பிரச்னைகளை முன் வைத்து பிரசாரம் செய்து காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us