/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஸ்டாலின் வருகை ரத்தால் தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சிஸ்டாலின் வருகை ரத்தால் தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சி
ஸ்டாலின் வருகை ரத்தால் தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சி
ஸ்டாலின் வருகை ரத்தால் தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சி
ஸ்டாலின் வருகை ரத்தால் தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சி
ADDED : அக் 11, 2011 02:35 AM
ஈரோடு: ஈரோட்டில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ரத்து செய்ததால், தி.மு.க., வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.உள்ளாட்சி தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மேயர் பதவிக்கு, தி.மு.க., சார்பில், முன்னால் நகராட்சி தலைவர் அரங்கராசன் மகள் செல்லப்பொன்னி நிறுத்தப்பட்டு உள்ளார்.கடந்த 5ம் தேதி துவக்கி, வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி, பெரியசேமூர், சூரியம்பாளையம் என மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர் ராஜா உத்தரவின் பேரில், அந்தந்த நகராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர், தற்போது களத்திலுள்ள வேட்பாளர்களும், செல்லப்பொன்னியுடன் பிரச்சாரத்துக்கு வந்தனர்.பிரச்சாரத்துக்கு வந்த, சிட்டிங் நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகரப் பகுதியில் மேயர் குமார் முருகேஷ் வந்த போதும் பிரச்னை ஏற்பட்டது. இதனால், இருக்கும் வாக்கு வங்கியை இழக்காமல் இருக்க, குமார் முருகேஷ் வராமல் இருந்தால் போதும் என்றும், தி.மு.க.,வினர் தேர்தல் பணி சிறப்பாக மேற்கொள்ள, பிரச்சாரத்துக்கு ராஜா வர வேண்டும் என, வேட்பாளர்கள் எதிர்பார்த்தனர்.ஆரம்பத்தில், 'கே.வி.ஆர்., வேட்பாளரான மல்லிகாவை தோற்கடித்தே தீரவேண்டும்' என்று சொன்னதுடன் சரி, பிரச்சாரத்துக்கு ராஜா வரவே இல்லை.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஈரோடு வருவதாக இருந்தது. திடீரென, அவரது வருகையும் ரத்தாகிவிட்டது. அதிர்ச்சியடைந்த வேட்பாளர்கள், ராஜாவின் தந்தையிடம் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.


