ADDED : அக் 04, 2011 10:19 PM
சிவகங்கை:சிவகங்கை நகராட்சி 11 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் அழகுமுத்துபிச்சை கூறியதாவது: ''அம்பேத்கர் தெருவில் உள்ள குடிசை வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும். அரசு வழங்கிய இலவச 'டிவி', சமையல் எரிவாயு அடுப்பு, இளம்பெண்களுக்கு திருமண உதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு அரசு நலத்திட்டங்கள், முதியோர் பென்சன் அனைவருக்கும் வழங்கப்பட்டது. தெருக்கள் தோறும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
டியூப் லைட்டுகள் இருந்த தெருவிளக்குகள் சோடியம் விளக்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறுவர்கள் விளையாட பரணி நகர் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மண் தரைகளை தார்சாலையாகவும், தார்சாலைகளை சிமெண்ட் சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளது. குழந்தைகள் காப்பகம் புதுப்பித்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விடுபட்டுள்ள பணிகள் மீண்டும் வெற்றி பெற்றால் நிறைவேற்றப்படும் '' என்றார்.


