ADDED : செப் 05, 2011 11:48 PM
கிள்ளை: பரங்கிப்பேட்டை ஒன்றியம் மற்றும் கிள்ளை பேரூராட்சி பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம் தில்லைவிடங்கனில் நடந்தது.
ஒன்றிய செயலர் ராஜா தலைமை தாங்கினார். நகர செயலர் ரமேஷ் வரவேற்றார். ஒன்றிய தலைவர் தமிழரசன், கிள்ளை நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் இளங்கோவன், சங்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலர் வேணுபுவனேஸ்வரன், தலைவர் அன்பழகன், நிர்வாக குழு உறுப்பினர் அகிலாண்ட பிச்சாண்டி உட்பட பலர் பேசினர். ஒன்றிய துணைச் செயலர் சசிகுமார், அமைப்புச் செயலர் புஷ்பராஜ் மற்றும் நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி அமைப்பதில்லை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


