டிராய் முடிவு: மாற்றுத்திறனாளிகள் அவதி
டிராய் முடிவு: மாற்றுத்திறனாளிகள் அவதி
டிராய் முடிவு: மாற்றுத்திறனாளிகள் அவதி
ADDED : அக் 04, 2011 11:05 AM
சென்னை: ஒருநாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்., அனுப்ப மட்டுமே அனுமதி என்ற டிராய் முடிவால் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மொபைல் போன்களில் செயல்பாடுகளில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்.,கள் மட்டுமே அனுப்ப தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் கட்டுப்பாடு கொண்டு வந்தது. இதன் காரணமாக தாங்கள் மிகவும் அவதிக்குள்ளாவதாக வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் கவலை தெரிவித்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே இருக்கும் போது தங்களின் ஒரே தொடர்பு சாதனமாக மொபைல் போன் எஸ்.எம்.எஸ்.,கள் இருந்து வருவதாகவும், ஆணையத்தின் கட்டுப்பாடு காரணமாக தங்களால் மற்றவர்களை எளிதில் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும், தங்களுக்கு இக்கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


