ADDED : செப் 03, 2011 11:27 PM
கோத்தகிரி : கோத்தகிரியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பொம்மன் நேரு யுவகேந்திரா சார்பில், 2 நாட்கள் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி துவக்க விழாவில் எச்.ஆர். எம்., அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் போஜராஜன், பெட்காட் நுகர்வோர் அமைப்பின் மாநில துணை தலைவர் ராஜன், நல்லாசிரியர் விருது பெற்ற பசுவராஜ் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் எலிசபெத் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை பொம்மன் நேரு யுவகேந்திரா நிர்வாகிகள் தர்மராஜ், வெற்றிவேல்குமார், பாலமுருகன், நந்தகுமார் உறுப்பினர்கள் செய்திருந்தனர். பயிற்சியை சென்னை கிருஷ்ணம்மாச்சார்யா யோகா மந்திர பயிற்றுனர்கள் சீனிவாசன், அருள் பயிற்சி அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


