ADDED : ஆக 18, 2011 09:27 PM
ஆண்டிபட்டி:திருமங்கலத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(64). இவர் தேனியில் உள்ள
ஒரு வங்கியில் தனது நகைகளை அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன்
தேனியில் இருந்து பஸ்சில் வந்துள்ளார். க.விலக்கு பகுதியை கடந்ததும்
பக்கத்தில் குழந்தையுடன் நின்றிருந்த பெண் குழந்தையை கோவிந்தராஜிடம்
கொடுத்துள்ளார்.
ஆண்டிபட்டி அவுட்டர் பஸ் ஸ்டாப்பில் அந்த பெண் குழந்தையுடன் இறங்கி சென்று
விட்டார். தனது கட்டைப்பையில் வைத்திருந்த பணப்பையை காணாது திடுக்கிட்டார்.
ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் பை காணாமல் போனது குறித்து ஆண்டிபட்டி
போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கண்ணன் இது குறித்து விசாரணை நடத்தி
வருகிறார்.


