Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/புலி குட்டிகளை கண்டு பிரமிப்பு

புலி குட்டிகளை கண்டு பிரமிப்பு

புலி குட்டிகளை கண்டு பிரமிப்பு

புலி குட்டிகளை கண்டு பிரமிப்பு

ADDED : ஆக 25, 2011 01:51 AM


Google News
பந்தலூர் : முதுமலையில் தென்பட்ட புலி குட்டிகள், பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உட்பட வன விலங்குகள் உள்ளன. மாவட்டத்துக்கு வரும் பார்வையாளர்கள், வனப்பகுதிகளையும், விலங்குகளையும் கண்டு ரசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன், புலிகள் காப்பகத்துக்கு வந்த பார்வையாளர்கள் சிலர், மூன்று புலி குட்டிகளை பார்த்து பிரமித்துள்ளனர். சிறிது நேரம் இப்பகுதியில் காட்சி தந்து, வனப்பகுதிக்குள் மறைந்தன. புலி உட்பட அரிய வகை விலங்கினங்களை பாதுகாக்க, வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான், முக்கிய கோரிக்கையாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us