/உள்ளூர் செய்திகள்/கரூர்/நகராட்சி, டவுன் பஞ்சாயத்துக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்நகராட்சி, டவுன் பஞ்சாயத்துக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்
நகராட்சி, டவுன் பஞ்சாயத்துக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்
நகராட்சி, டவுன் பஞ்சாயத்துக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்
நகராட்சி, டவுன் பஞ்சாயத்துக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்
ADDED : அக் 12, 2011 02:21 AM
கரூர்: உள்ளாட்சி தேர்தலையொட்டி நகராட்சி மற்றும் டவுன்
பஞ்சாயத்துக்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வரும் 17 ம் தேதி மற்றும் 19
ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட
தேர்தலுக்கு வரும் 15 ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.
கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்பட்டது.
முதல் முறையாக வரும் உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி மற்றும் டவுன்
பஞ்சாயத்துகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த மாநில
தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் வழக்கம் போல்
ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது.கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை
ஆகிய இரண்டு நகராட்சிகள், உப்பிடமங்கலம், புலியூர், புஞ்சை
தோட்டக்குறிச்சி, தமிழ்நாடு காகித ஆலை, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி,
கிருஷ்ணராயபுரம் பழைய ஜெயங்கொண்டாபுரம், மருதூர், நங்கவரம் ஆகிய 11 டவுன்
பஞ்சாயத்துகள் உள்ளது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும் தலைவர் பதவிக்கு ஓட்டு
போட தனியாகவும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஓட்டு போட தனியாகவும் மின்னணு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுகிறது.
கரூர் நகராட்சியில் 159 ஓட்டுச்சாவடிகளும், குளித்தலையில் 26,
உப்பிடமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் 15, புலியூர் 16, புஞ்சைபுகளூர் 22,
புஞ்சை தோட்டக்குறிச்சி15, தமிழ்நாடு காகித ஆலை 12, பள்ளப்பட்டி 25,
அரவக்குறிச்சி 16, கிருஷ்ணராயபுரம் 15, பழைய ஜெயங்கொண்டாபுரம் 15, மருதூர்
15, நங்கவரத்தில் 18 என மொத்தமாக 369 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே
உள்ளதால், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நகராட்சி மற்றும்
டவுன் பஞ்சாயத்துகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. இன்று முதல் மின்னனு ஓட்டுப்பதிவு
இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் மற்றும் பெயர்கள் அடங்கிய விபரச்சீட்டு
பொருத்தப்படும் என தெரிகிறது. நேற்று மின்னணு ஓட்டுப்பதி வு இயந்திரங்கள்
அனுப்பும் ப ணியை மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் பிரேமாவதி ஆய்வு
செய்தார்.


