/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/லேப்-டாப், மொபைல் திருடிய வாலிபர் கைதுலேப்-டாப், மொபைல் திருடிய வாலிபர் கைது
லேப்-டாப், மொபைல் திருடிய வாலிபர் கைது
லேப்-டாப், மொபைல் திருடிய வாலிபர் கைது
லேப்-டாப், மொபைல் திருடிய வாலிபர் கைது
ADDED : ஜூலை 27, 2011 01:22 AM
புதுச்சேரி : வெண்ணிலா நகரைச் சேர்ந்தவர் சதீஷ்.
தவளக்குப்பம் தனியார் கலைக்கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர், வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். பிறகு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த லேப்-டாப், ஒரு மொபைல் போன் திருடுபோனது தெரிய வந்தது. உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் எல்லையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த வினோத், 22, என்பவர் திருடியது தெரிய வந்தது. லேப்- டாப், மொபைல் போனை விற்க முயன்றபோது, வினோத்தை போலீசார் கைது செய்தனர்.