Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஓட்டுச்சீட்டு அச்சிடும் பணி மும்முரம் அக்., 10ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு

ஓட்டுச்சீட்டு அச்சிடும் பணி மும்முரம் அக்., 10ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு

ஓட்டுச்சீட்டு அச்சிடும் பணி மும்முரம் அக்., 10ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு

ஓட்டுச்சீட்டு அச்சிடும் பணி மும்முரம் அக்., 10ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு

ADDED : அக் 08, 2011 01:31 AM


Google News
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால், ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியது. மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிறம், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு பச்சை நிறம், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பிங்க், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிறம், பஞ்சாயத்து வார்டில் இரு உறுப்பினர் பதவிக்கான இடங்களுக்கு வெள்ளை மற்றும் நீல நிற ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு பிங்க் நிறம், மாநகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பதவிக்கு வெள்ளை நிறத்திலும் ஒட்டுச்சீட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. இப்பணிகளை பார்வையிட்ட கலெக்டர் சண்முகம், ''இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். 10ம் தேதிக்குள் அனைத்து ஓட்டுச்சீட்டுகளையும் அச்சடித்து முடிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜேந்திரபிரசாத், (வளர்ச்சி) சிவகுமார், ஆர்.டி.ஓ., சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us