Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/200 வீடுகளில் துறவியர் தீபம் ஏற்றி வழிபாடு

200 வீடுகளில் துறவியர் தீபம் ஏற்றி வழிபாடு

200 வீடுகளில் துறவியர் தீபம் ஏற்றி வழிபாடு

200 வீடுகளில் துறவியர் தீபம் ஏற்றி வழிபாடு

ADDED : ஜூலை 19, 2011 09:22 PM


Google News

அன்னூர் : தீண்டாமை இருள் அகற்ற 200 வீடுகளில் இந்து துறவியர் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.அன்னூர் அருகே குருக்கிளையம்பாளையத்தில் கடந்த மாதம் இருதரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.

இப்பிரச்னை குறித்து விளக்கம் அளிக்கம்படி தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இப்பகுதியில் பிரச்னைக்கு தீர்வு காணவும், அமைதி ஏற்படவும் முயற்சி செய்து வருகின்றனர். இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று முன்தினம் காலனிகளில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்பாளையம் பட்டத்தரசியம்மன் கோவிலில் சிவலிங்கேஸ்வர சாமிகள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். எம்.ஜி.ஆர்.நகர், கரியாம்பாளையம், கிருஷ்ணகவுண்டன்புதூர், பசூர் ஆகிய ஊர்களில் உள்ள காலனிகளில் 200 வீடுகளில் சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், லலிதாம்பிகை பீடம் ஜெகன்னாத சாமி, தொட்டிபாளையம் கருப்பராய சாமி, கிருஷ்ணமூர்த்தி சாமி ஆகிய துறவியர் காமாட்சி தீபம் மற்றும் விபூதி பிரசாரம் வழங்கினர். இந்து இளைஞர் மன்றத்தினர் திருவாசங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வீடுகளில் ஒட்டினர். இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அர்ஜுன் சம்பத் பேசுகையில்,''இந்து மதத்தில் எந்த பிரிவினருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. தொழில் காரணமாக சில பிரிவுகள் ஏற்பட்டதே தவிர யாரும் தாழ்ந்தவர்கள் அல்ல. காலனி பகுதியில், தேவாரம், திருமுறை பயிற்சி வகுப்புகள் நடத்தவும், சிறு தெய்வ வழிபாடு குறித்து விளக்கவும் திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

சிரவை ஆதீனம் குமரகுருபர சாமி பேசியதாவது: பெரிய புராணத்தில் 63 நாயன்மார்கள் போற்றப்படுகிறார்கள். அப்புராணத்தில் எல்லா குலத்தை சேர்ந்தவர்களும் சிவபெருமானை போற்றி அருள்பெற்றவர்கள். இந்து மதம் ஜாதி நிலையற்ற சமயவழியை போற்றுகிறது. கொங்கு நாட்டில் திருமடங்கள், இந்து அமைப்புகள் சார்பில் கிராமம்தோறும் சென்று ஜாதி வேறுபாடு இல்லை என்று எடுத்துச் சொல்லும் விதமாக, காலனியில் வீடு வீடாக சென்று தீபம் ஏற்றி, வழிபாடு செய்து வருகிறோம்.இவ்வாறு, குமரகுருபர சாமி பேசினார்.கொங்கு நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை பொதுச்செயலாளர் இளங்கோவன், கொங்கு இளைஞர் பேரவை கிளை தலைவர் அங்கமுத்து, பரிஷத் நிர்வாகி மூர்த்தி உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மதியம் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் சமபந்தி விருந்தும், ஓதிமலை ரோட்டில் தெருமுனை பிரசாரமும் நடந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us