/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கீழப்பூங்குடி, பிரவலூருக்கு குடிநீர் வசதி: வேட்பாளர் உறுதிகீழப்பூங்குடி, பிரவலூருக்கு குடிநீர் வசதி: வேட்பாளர் உறுதி
கீழப்பூங்குடி, பிரவலூருக்கு குடிநீர் வசதி: வேட்பாளர் உறுதி
கீழப்பூங்குடி, பிரவலூருக்கு குடிநீர் வசதி: வேட்பாளர் உறுதி
கீழப்பூங்குடி, பிரவலூருக்கு குடிநீர் வசதி: வேட்பாளர் உறுதி
ADDED : செப் 30, 2011 01:22 AM
சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் கீழப்பூங்குடி பிரவலூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.,சார்பில் ஆ.வடிவேலன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் கூறியதாவது: கீழப்பூங்குடி,பிரவலூர், வீரப்பட்டி, பேரணிபட்டி,குருந்தபட்டி,செம்புளியான்பட்டினம் ஆகிய கிராமங்களுக்கு நல்ல குடிநீர் வசதி செய்யப்படும். மேலும் சிமென்ட் சாலையும், முதல்வரின் அனைத்து நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க பாடுபடுவேன்.பிரவலூர் விலக்கிலிருந்து பள்ளிக் கூடம் வரை தார் சாலை அமைக்கப்படும். கீழப்பூங்குடி சின்ன ஊரணி தூர்வாரப்படும். வரத்து கால்வாய் சீரமைக்கப்படும். கீழப்பூங்குடி மயானத்திற்கு தார் சாலையும்,பிரவலூர், கீழப்பூங்குடியிலும் திருமண மண்டபம் கட்டித்தரப்படும். வீரப்பட்டி மயான சாலை தார் சாலையாக மாற்றி தரப்படும் என்றார்.