/உள்ளூர் செய்திகள்/மதுரை/வேட்பாளரின் கணவர் அலுவலகத்தில் பதுக்கிய 595 மதுபாட்டில்கள் பறிமுதல்வேட்பாளரின் கணவர் அலுவலகத்தில் பதுக்கிய 595 மதுபாட்டில்கள் பறிமுதல்
வேட்பாளரின் கணவர் அலுவலகத்தில் பதுக்கிய 595 மதுபாட்டில்கள் பறிமுதல்
வேட்பாளரின் கணவர் அலுவலகத்தில் பதுக்கிய 595 மதுபாட்டில்கள் பறிமுதல்
வேட்பாளரின் கணவர் அலுவலகத்தில் பதுக்கிய 595 மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : அக் 11, 2011 02:24 AM
அழகர்கோவில் : மதுரை கள்ளந்திரியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது
பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவுப்படி, நேற்று மாலை வருவாய்த்துறை அலுவலர்கள் வி.ஏ.ஓ.,க்கள்
வாசுகி,தோப்புசாமி பழனிச்சாமி ஆகியோர் கள்ளந்திரிசென்று, ஊராட்சி தலைவர்
பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் புஷ்பாவின் கணவர் மகேந்திரன் வீட்டில்
சோதனை நடத்தினர். அங்கு மதுபாட்டில்கள் இல்லாததால், அவரது அலுவலகத்தில்
சோதனை செய்தனர். புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 595 மது
பாட்டில்களண அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல்
செய்தனர். வடக்கு தாசில்தார் அலெக்சாண்டர்ராய் புகாரின்பேரில் போலீசார்
விசாரித்து வருகின்றனர். மேலூர்: மேலூர் கோட்டநத்தம்பட்டி ஊராட்சி தலைவர்
பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., பிரமுகர் மாணிக்க
வாசகம், புதுப்பட்டி அருகில் பொலீரோ காரில் (டி.என்.59. ஏ.ஆர்., 6000) வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை
நேற்றிரவு 9.30 மணிக்கு வாக்காளர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். தகவல்
அறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.கார் டிரைவர் தப்பி ஓட,
மது பாட்டில்களை வழங்கிக் கொண்டிருந்த குறிஞ்சி குமரன்,18, விஜய்,19,
இளங்கோவன்,35 போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்த 80 குவாட்டர்
பாட்டில்களையும், 20 பீர் பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து மூன்று
பேரையும் கைது செய்தனர்.


