ADDED : ஆக 28, 2011 11:48 PM
கோவை : கோயமுத்தூர் காயின் சொசைட்டி சார்பில் நாணயங்கள், தபால் தலை
சேகரிப்போர் கூட்டம், ராம்நகர் சபர்பன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று
நடந்தது.
சங்க தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். செயலாளர்
ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். சென்னை, கோவை,ஈரோடு, திருச்சி,
தஞ்சாவூர், பாலக்காடு, எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த
நாணயங்கள், தபால் தலைகள் சேகரிப்போர் பங்கேற்ற இக்கூட்டத்தில், அரிய வகை
நாணயங்களை பாதுகாப்பது, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி
விவாதித்தனர். நாணயங்கள் குறித்த செய்திகள், விவரங்கள் மற்றும் ஆலோசனைகள்
வழங்கப்பட்டன. சோழர் காலத்து நாணயங்கள் முதல் ஆங்கிலேயர் காலத்தில்
வெளியிடப்பட்ட தபால் தலைகள், வெளிநாட்டு கரன்சி உள்ளிட்டவை விற்பனை
செய்யப்பட்டன. கோயமுத்தூர் காயின் சொசைட்டி உதவி செயலாளர் சுப்ரமணியம்,
பொருளாளர் சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


