முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் பொன்முடி திடீர் கைது
முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் பொன்முடி திடீர் கைது
முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் பொன்முடி திடீர் கைது

முதுநகர்:கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியை, முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்து திருவாரூர் கோர்ட்டிற்கு அழைத்துச் சென்றனர்.விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க நிலத்தை மோசடியாக வாங்கிய வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, கடந்த 31ம் தேதி கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.நில அபகரிப்பு வழக்கில் பொன்முடிக்கு ஜாமின் கிடைத்தால், திருவாரூரில் கடந்த ஜூன் 5ம் தேதி நடந்த தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியது தொடர்பாக, தகாத வார்த்தைகளால் பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் பதிவு செய்த வழக்கில், கைது செய்யும் பொருட்டு, திருவாரூர் போலீசார், கடந்த 7ம் தேதி முதல் தினமும் கடலூர் மத்திய சிறை முன் காத்திருந்தனர்.
இதையறிந்த பொன்முடி, திருவாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமின் கோரி, கடந்த 13ம் தேதி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதையேற்று, காலை 11.15 மணிக்கு சிறையிலிருந்த பொன்முடியை சிறைக் காவலர்கள், திருவாரூர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின், திருவாரூர் போலீசார், பொன்முடியை பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் திருவாரூக்கு அழைத்துச் சென்றனர்.சிறை வாசலில் போலீஸ் வேனில் இருந்துபடி நிருபர்களிடம் பேசிய பொன்முடி, 'திருவாரூர் பொதுக் கூட்டத்தில் பேசிய வழக்கில் என்னை கைது செய்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு விசாரணைக்கு முன்னதாக கைது செய்துள்ளனர்' என்றார்.


