/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாநகராட்சியில் ஊழியர்கள் வருகைப்பதிவு இயந்திரம் பழுதுமாநகராட்சியில் ஊழியர்கள் வருகைப்பதிவு இயந்திரம் பழுது
மாநகராட்சியில் ஊழியர்கள் வருகைப்பதிவு இயந்திரம் பழுது
மாநகராட்சியில் ஊழியர்கள் வருகைப்பதிவு இயந்திரம் பழுது
மாநகராட்சியில் ஊழியர்கள் வருகைப்பதிவு இயந்திரம் பழுது
ADDED : அக் 12, 2011 01:32 AM
ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில் ஊழியர்களின் வருகைப் பதிவேடு இயந்திரம் பழுதாகி
பல மாதங்களாகியும் சரி செய்யப்படவில்லை.ஈரோடு பிரப்ரோட்டில் மாநகராட்சி
மைய அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள்
காலை அலுவலகத்துக்கு வருவது மற்றும் மாலை வெளியே செல்லும் நேரத்தை பதிவு
செய்யும் வகையில் வருகைப் பதிவேடு இயந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த
இயந்திரத்தில் காலை, மாலை வேளையில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்குள் தங்கள்
கைரேகையை வைத்து, பதிவு செய்யாவிட்டால், 'ஆப்சென்ட்' காட்டும். ரேகை பதிவு
இல்லாத நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இதனால், அலுவலர்கள்
சரியான நேரத்துக்கு அலுவலகத்தில் இருந்தனர்.மாநகராட்சியில் உள்ள இந்த
இயந்திரம் பழுதாகி, பல வாரமாகியும் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது. இதன்
காரணமாக ஊழியர்கள் வருகையை சரியாக கண்காணிக்க முடியவில்லை. சிலர்
அலுவலகத்துக்கு தாமதமாக வருவது, பணி நேரத்துக்கு முன்பே வெளியேறுவது,
இடைப்பட்ட நேரத்தில் வெளியே சென்று சொந்த வேலையை பார்ப்பது போன்ற
செயல்களில் ஈடுபடுகின்றனர்.இதன்மூலம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தேவையற்ற
இழப்பு ஏற்பட்டு வருகிறது. உடனடியாக வருகைப் பதிவேடு இயந்திரத்தை சரி
செய்வதோடு, அதைத் தொடர்ந்து பராமரிப்பது, அதனடிப்படையிலேயே ஊழியர்களுக்கு
சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


