ஓட்டுக்கு பணம் : தி.மு.க., வேட்பாளர் கைது
ஓட்டுக்கு பணம் : தி.மு.க., வேட்பாளர் கைது
ஓட்டுக்கு பணம் : தி.மு.க., வேட்பாளர் கைது
ADDED : அக் 04, 2011 09:31 PM
மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில், வாக்காளர்களுக்கு தி.மு.க.,வினர் பணம் வழங்கிய வழக்கில், 3வது வார்டு தி.மு.க., வேட்பாளர் சம்பத்ராஜா கைது செய்யப்பட்டார்.
மண்டபம் கேம்ப் அண்ணா குடியிருப்பு பகுதியில், தி.மு.க.,வினர் ஓட்டுக்கு பணம் வழங்குவதாக, தேர்தல் அலுவலர் பரஞ்சோதிக்கு தகவல் கிடைத்தது. இவர், அந்த பகுதியில் சோதனை நடத்தியதில், அப்பகுதி பெண்கள் வைத்திருந்த, 4,500 ரூபாயை பறிமுதல் செய்தார். பின்னர், போலீசில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில், 3வது வார்டில் போட்டியிடும் தற்போதைய 1வது வார்டு கவுன்சிலர் சம்பத்ராஜா, தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்குமாறு பணம் வழங்கியது தெரிந்தது. சம்பத்ராஜாவை, மண்டபம் போலீசார் கைது செய்தனர்.


